அண்ணாமலை காலையில் ஒன்று மாலையில் ஒன்று என பேசக்கூடிய ஆள் - அமைச்சர் சேகர் பாபு தாக்கு! - Seithipunal
Seithipunal



கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பத்து கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் லோகேஷின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "இந்த மக்களவைத் தேர்தலில் 40ம் நமதே என்று வென்று காட்டியுள்ளோம். அடுத்தது 2026 சட்டமன்றத் தேர்தல் தான்.

எனவே அதற்கான பணிகளை நாம் இப்போதே தொடங்க வேண்டும். அண்ணாமலை காலையில் ஒன்று பேசுவார். மதியம் ஒன்று பேசுவார். மாலையில் வெயில் தணிந்த பின் வேறு ஒன்று பேசுவார். இந்த மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை ஒரு கட்சியின் நிழலில் தான் போட்டியிட்டார்.


அவர் அண்ணாமலை என்ற அவரது பெயரின் நிழலில் போட்டியிட்டு இருந்தால் டெபாசிட் கூட பெற்று இருக்க மாட்டார் என்பது ஊருக்கே தெரியும். திமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி வாகை சூடும். அப்போது அண்ணாமலையும்  சட்டமன்ற தேர்தலில் களமிறங்கட்டும். அவரது டெபாசிட் தொகையை அவர் முதலில் காப்பாற்றிக் கொள்ளட்டும்" என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sekar Babu Speaks About Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->