இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்..சிறுமியைப் பலாத்காரம் செய்த வாலிபர் தப்பி ஓட்டம்! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசைவார்த்தை கூறி 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கொல்லங்கோடை அடுத்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் பள்ளிக்குச் சென்று வரும்போது 2 பேரும் சந்தித்து பேசி வந்தனர்.

இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஜெர்வின், சிறுமியைக் கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியைப் பலாத்காரம் செய்தாராம். பல முறை இது போன்று பலாத்காரம் செய்தாராம் நடந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களாகச் சிறுமிக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மகளிடம் தாய் கேட்டுள்ளார். அப்போதுதான் ஜெர்வின், பலாத்காரம் செய்ததை சிறுமி கூறினார். இதைக் கேட்டுத் தாய் அதிர்ச்சிடைந்தார். உடனே குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெர்வின் தலைமறைவானார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Habit through InstagramTeenage girl raped by man flees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->