செந்தில்பாலாஜி ஜாமின் ரத்து செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Minister Senthilbalaji Bail case Supremecourt
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்ற ஜாமின் தீர்ப்பை திரும்ப பெறக் கோரும் மனுவுக்கு, செந்தில்பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக இருந்தது தொடர்பாக டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்கும் காரணத்தால் சாட்சிகளுக்கு அச்சம் ஏற்படக்கூடும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜாமின் வழங்கப்பட்ட அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்றது, சாட்சிகளின் நிலைமையை நெருக்கடிக்கு உள்ளாக்கும் காரணமாக பார்க்கப்படுவதாகவும், இது கவலைக்குரியது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் தீர்ப்பை மீளாய்வு செய்து திரும்ப பெற வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Senthilbalaji Bail case Supremecourt