அசைவ உணவக விவகாரத்தில் "எங்களால் தலையிட முடியாது".! ஆளுநரின் அறிக்கைக்கு அமைச்சர் பதில்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த வியாழக்கிழமை  2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார். பிறகு கிரிவலம் சென்ற ஆளுநர் ரவி அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "கிரிவல பாதையில் போதிய கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையிலும் அந்த கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பது வருத்தமளிக்கிறது.

இந்த அசைவ உணவகங்கள் இருப்பது குறித்து பக்தர்களும் வருத்தமடைந்து என்னிடம் தெரிவித்தனர். உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது என்றாலும் அருணாசலேஸ்வரரை தரிசிக்க வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

எனவே கிரிவல பாதையில் உள்ள அசைவ உணவகங்களை மூட வேண்டும்" என ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் அறிக்கை குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில் "திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்களை மூடும் விவகாரத்தில் தமிழக அரசால் எதுவும் செய்ய முடியாது.

கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகத்தில் உணவு உண்பதும் உண்ணாததும் தனிப்பட்ட விருப்பம். அதில் அரசு தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. கிரிவலம் செல்ல அதிகம் மக்கள் வரும் பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகிறார்கள்" என ஆளுநரின் அறிக்கைக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister velu response to Governor Ravi statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->