'அந்த கட்டை விட இந்த கட்டே  பரவாயில்ல' அமைச்சர் துரைமுருகன் கல... கல....  - Seithipunal
Seithipunal


அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவால், அரசியல் நிகழ்வுகளில் சமீப காலமாக பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில்,  அரக்கோணம் தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன், தன்னை வெற்றிபெற செய்ததற்காக காட்பாடி வட்டம் பொன்னை, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

அவருடன் தமிழக நீா் வளத்துறை துரைமுருகன் சென்றிருந்தாா். அப்போது அவர் பேசுகையில், எனக்கு மருத்துவர்கள்  எழுந்து நடக்கக்கூடாது என்று கால்கட்டு போட்டுள்ளனர். ஆனால் 40  வருடங்களுக்கு முன்பே எனக்கு கால்கட்டு போட்டுவிட்டார்கள். இரண்டு கட்டில் எது பரவாயில்லை என்று கேட்டால் இதுவே பரவாயில்லை  என்று சிரித்தபடி கூறினார்.

அப்போது, தங்கள்  பகுதியில் ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் அரிசி குண்டு குண்டாக இருப்பதாக மக்கள் அவரிடம் புகார் அளித்தனர். அதற்கு அவர்  நான் சொல்வதை செய்வேன் என்று கூறி,  அதிகாரிகளுக்கு தரமான அரிசி போட வேண்டும் என அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minster duraimurugan - jagathratchagan - thanks to voters - katpadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->