#BigBreaking || வான்வழி தாக்குதலை தொடங்கிய ரஷ்யா., உச்சகட்ட போர் சற்றுமுன் தொடங்கியது.!  - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை சற்று முன்பு தொடங்கியுள்ளது. 

உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் சற்றுமுன்பு வான்வெளி தாக்குதலை ரஷ்யா தொடங்கி உள்ளது.

மேலும் பீரங்கிகள் மூலமாகவும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வான்வழித் தாக்குதலை ரஷ்யா தற்போது தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை சற்று முன்பு அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட இந்தப் போரில்  தனது உச்சகட்ட தாக்குதலை ரஷ்யா தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது. இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த காணொளி பின்வருமாறு:

கார்கிவ் பிராந்திய நிர்வாகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல், சும்ஸ்கா 64. குடியிருப்புப் பகுதிகளில் கிராட் ஷெல் தாக்குதல். புடின் இப்போது உக்ரைனுடன் முழுமையான போரில் ஈடுபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missile attack on the Kharkiv regional administration


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->