விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? - முக ஸ்டாலின் விளக்கம்! - Seithipunal
Seithipunal


"நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி” என்ற தலைப்பில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ஓர் இடைத்தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? என்பது குறித்தும் முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு :

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி.நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது;

அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம்” என்று அந்த கடிதத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin DMK Vikravandi By Election AnniyurSiva victory Celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->