புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்! - Seithipunal
Seithipunal


சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தலைமைச் செயலாளர், ஆளுநர் ரவி, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். முதலாவதாக சேலம், பனைமரத்துப்பட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான இரா ராஜேந்திரன் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 

இரண்டாவதாக சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பதவி ஏற்று கொண்டார். 

மூன்றாவதாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி. செழியன் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்/ பட்டியலினத்தை சேர்ந்த செழியன். உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நான்காவதாக கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராக இன்று பதவி ஏற்று கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin new cabinet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->