கோவை செல்வராஜ் என்னை திட்டியிருக்கிறார்! ஆனால், எனக்கு கோபமே வந்ததில்லை - ஸ்டாலின் பேச்சு!
MK Stalin Say About Kovai Selvaraj Ex ADMK
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் அண்மையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், "கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தபோது விவாத மேடையில் பேசும்போது வெளிப்படையாக என்னை திட்டியிருக்கிறார். ஆனால் அவர் மீது எனக்கு கோவமே வந்ததில்லை" என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தபோது விவாத மேடையில் பேசுவார். அவர் பேசும்போது வெளிப்படையாக பேசக்கூடியவர். சில நேரங்களில் என்னை திட்டியிருக்கிறார்.
ஆனால் அவர் மீது எனக்கு கோபமே வந்ததில்லை. காரணம் அவர் எதையும் வெளிப்படையாக பேச கூடியவர். சிலர் திட்டும் போதெல்லாம் கோபம் வரும் எனக்கு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அப்போது 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றோம். இப்போது 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
வெற்றிக்கு காரணம் ஆட.சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கைதான். அதனால் தான் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.
மதத்தை பயன்படுத்தி ஜாதியை பயன்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிக்கான வியூகம் வகுத்து புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றாக வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
English Summary
MK Stalin Say About Kovai Selvaraj Ex ADMK