பாஜக டஃப் கொடுக்கும்! அனல் தெறிக்கும் தொகுதிக்கு எச்சரிக்கை மணியடித்த முக ஸ்டாலின்!
MK Stalin Warn ro Vellore DMK Candidate Kathir Anand for BJP
கடந்த 2019 வரை வேலூர் என்றாலே பாலாறும், கடுமையான வெயிலுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும். அதன்பின்னர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதால் மக்களவை தேர்தல் ரத்ததான தலைகுனிவு சம்பவமும் இணைந்து கொண்டது.
அப்போது திமுக சார்பாக களமிறக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனின் கதிர் ஆனந்த் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த கணக்கிடப்படாத பெரும் தொகையை வருமானவரி கைப்பற்றியது.
இதனை அடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய, அதன் பெயரில் குடியரசுத் தலைவரும் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
2019 மக்களவைத் தேர்தலில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு மிகப்பெரும் தலைகுனிவு என்றும் பார்க்கப்பட்டது.
தொடர்ந்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டு, திமுக சார்பில் தற்போதைய தமிழக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக களம் இறங்கினார்.
அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கடினம் என்று சொல்லப்பட்ட நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளால் திமுகவின் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார்.
தனது தோல்விக்கு அதிமுகவின் ஒத்துழைப்பு இல்லை என்று நினைத்த ஏசி சண்முகம், நேரடியாகவே விமர்சனம் செய்யவும் தொடங்கினார். அப்போதே அவர் இனி அதிமுக கூட்டணியில் இடம்பெறமாட்டார் என்றும் சொல்லப்பட்டது.
தற்போதைய 2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக தரப்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் களமிறங்க உள்ளது உறுதியாகி உள்ளது.
அதிமுக - பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில், பாஜகவின் கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் மீண்டும் வேலூர் தொகுதியிட 100 சதவீதம் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அவரின்
ஏசி சண்முகம் அதிமுகவின் துணை இல்லாமல் பாஜகவின் துணைவோடு களம் இறங்கி இருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று ஒரு தரப்பினர் ஆருடம் கூறினாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பிரச்சார பயணம் மற்றும் ஏசி சண்முகம் தொகுதி முழுவதும் மேற்கொண்டுள்ள நலத்திட்ட உதவிகள் அவரின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.
இந்த நிலையில், திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேட்பாளர் நேர்காணலில் கதிர் ஆனந்தை 'முதல் வெற்றி வேட்பாளர்' என்று வரவேற்றுள்ள விவகாரம் திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் தூத்துக்குடி தொகுதியில் எந்த போட்டியும் இன்றி கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
அதேபோல் இந்த வேலூர் தொகுதியிலும் இரண்டு பேர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அமைச்சர் துறைமுகன் மகன் கதிர் ஆனந்தும், திமுகவின் அவைத்தலைவராக இருந்த முகமத் சாஹு என்பவரும் கொடுத்திருந்தனர்.
இதில் முகமது சாஹு திமுக தலைவர், முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்காகவே இந்த விருப்பமனுவை கொடுத்ததாக அந்த இடத்திலேயே போட்டுடைத்து சென்றுவிட, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் களமிறங்குவது 100% உறுதியாகிவிட்டது.
இதனை அடுத்தே கதிர் ஆனந்தை வேட்பாளர் நேர்காணலில் வாங்க முதல் வெற்றி வேட்பாளரே என்று மு க ஸ்டாலின் மனம் குளிர வரவேற்றுள்ளார்.
அதோடு "வேலூரில் பாஜக ரொம்ப டஃப் கொடுப்பாங்க, எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். புரியுதா..." என்று கதிர் ஆனந்திடம் அழுத்தமாக சொல்லி அனுப்பி உள்ளாராம் மு க ஸ்டாலின்.
வரவேற்கும் போது வெற்றி வேட்பாளர் என்று அழைத்தாலும், போகும்போது பாஜகவை மேற்கோள் காட்டி மும்முறமாக களத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை தளபதியே கொடுத்திருப்பதால், இந்த ஐந்து வருட காலகட்டத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தது, கே வி குப்பம் டோல்கேட் செயல்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்தது என தான் செய்த பல்வேறு சாதனைகளை மக்களிடம் தெரிவித்து இப்போதே கதிர் ஆனந்த் வாக்கு சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.
English Summary
MK Stalin Warn ro Vellore DMK Candidate Kathir Anand for BJP