கி.வீரமணி பிறந்த நாள்.. நேரிலேயே சென்று முதல்வர் செய்த காரியத்தால் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


இன்று தனது 90 ஆவது பிறந்த நாளை தி.க தலைவர் கி.வீரமணி கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். 

அடையாரில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும், சில திமுக நிர்வாகிகளும் ஸ்டாலின் உடன் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், "திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கு ஏற்ப 10 வயது முதல் தந்தை பெரியாரின் லட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டராக தொடர்ந்து மேற்கொண்டு இளையோர்க்கு இணையாக, சமூக நீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி,  பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க்கழகமாம் திராவிட கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிகமகிழ்கிறேன்
 
திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் – வழிகாட்டியாய் அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.’என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wishes to k veeramani


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->