கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! தேர்தலுக்கான அறிகுறி தான்! - முதல்வர் மு.க ஸ்டாலின்.!!
MKStalin criticized gas cylinder price cut is elections sign
நாடும் முழுவதும் அனைத்து விதமான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதால் தற்போது 400 ரூபாய் விலை குறைந்துள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய பாஜக அரசு திடீரென 200 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை குறைத்து இருப்பதை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் அதன் மீது விமர்சனம் முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேஸ் விலை குறைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் "இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான அறிகுறியாகும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என மத்திய பாஜக அரசு விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
MKStalin criticized gas cylinder price cut is elections sign