ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் - முதல்வர் ஸ்டாலின் டிவிட்.!
MKStalin twit about amit sha speech
'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று விடுத்துள்ள பதிவில்,
"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா?
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது.
ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் அந்த அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin twit about amit sha speech