அரசு அதிகாரி வங்கி கணக்கில் இருந்து பணமோசடி - வருவாய் ஆய்வாளர்கள் உள்பட 3 பேர் கைது.!!
three peoples arrested for money fraud in chennai
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின்போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் என்ஆர்ஐ வங்கிக் கணக்கு செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஆட்சியரின் என்ஆர்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், என்ஆர்ஐ உதவித் தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி, அந்த முறைகேடு நடந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தினேஷ் என்பவரை என்ஆர்ஐ உதவித் தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்து, போலி ஆவணங்கள் வழங்கி, அவர் மூலம் வருவாய் ஆய்வாளர்கள் இரண்டு பேர் ரூ.11.63 லட்சம் பண மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வேன் ஓட்டுநர் தினேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என்று மொத்தம் 3 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் பணமோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for money fraud in chennai