தர்பூசணியில் ரசாயனம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிடமாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததை முன்னிட்டு தர்பூசணி விற்பனை களைக்கட்டியுள்ளது. இதற்கிடையே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் இறங்கி சில கடைகளில் தர்பூசணிகளை ஆய்வு செய்து அகற்றினர். மேலும், ஒதுக்கப்பட்ட தர்பூசணியில்  ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால், அது அகற்றப்பட்டதாக தகவல் பரவியது. இதனால், மக்கள் அச்சமடைந்து தர்பூசணி வாங்குவதை தவிர்த்து வந்தனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் இதுகுறித்து விளக்கம் கொடுத்திருந்தார். அதில், “தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. சென்னையில் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வரவில்லை. பொதுமக்கள் கவலையின்றி, தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது விவசாயிகள் சிறப்பான முறையில் தர்பூசணிகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.

எலி கடித்த பழம், அழுகிய பழங்களை மட்டுமே நாங்கள் அப்புறப்படுத்தியிருந்தோம். செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப்படுத்தவில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

foood safety department officer satheskumar transfer for watermelon powder issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->