அடேங்கப்பா!!! வீர தீர சூரன் 2 படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
9 days collection Veera Theera Sooran 2
தமிழ் திரையுலக நடிகர் kenny 'விக்ரம்' அவரது 62-வது படமாக, 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.மேலும் சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் box office வசூல் குவித்து வருகிறது.
இந்நிலையில்,இப்படம் வெளியாகி 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அவ்வகையில், இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
9 days collection Veera Theera Sooran 2