விஜயின் 'ஜனநாயகன்' குறித்த புதிய அப்டேட் என்ன தெரியுமா?
new update is on Vijays jana naayagan
நடிகர் விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன்'. இப்படத்தை எச். வினோத் இயக்க பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல்,பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.இப்படம் முடிந்த பிறகு முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதைத்தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 15-ந்தேதிக்குள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாகவே விஜய் தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் ஜுன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
English Summary
new update is on Vijays jana naayagan