உறுதியளித்த கமல்ஹாசன் | திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்?! பரபரப்பு பேட்டி!
MNM DMK Congress
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து, இடைத்தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாவது, "பாசத்திற்குரிய கமல்ஹாசனை இன்று சந்தித்து, இடைத்தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டேன். நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார்.
கொள்கை ரீதியாக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். எனவேதான், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினோம்.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்திருக்கிறது. காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது. எனவே எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டோம்" என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.