உயிரே உறவே தமிழே, நலமா? - கமல்ஹாசன் பரபரப்பு கடிதம்! - Seithipunal
Seithipunal



வாக்குரிமையின் வலிமையை உணர்வோம், பிறருக்கு உணர்த்துவோம் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடித்ததில், "ஜனநாயக அமைப்பில் நீங்களே தலைவர்கள். இப்படிச் சொல்வதற்கான ஒரே ஆதாரம், வாக்குரிமை. உங்களுக்குச் சேவை புரிவதற்கான நிர்வாக ஊழியர்களை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். இதைச் செய்ய நீங்கள் தேர்தல்களில் வாக்குச் செலுத்தியே ஆகவேண்டும்.

நமக்கான அரசைக் கட்டுவதில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும். பங்கேற்பு ஜனநாயகம் மலர்ந்தால்தான் நாம் கனவு காண்கிற அரசியல் மாற்றம், சமூக மாற்றம், பொருளாதார மாற்றம் என அனைத்தும்  சாத்தியமாகும். அதற்கான முதற்படி 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொருவரும் தேர்தல்களில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதுதான். 

கல்லூரியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, அரசியல் மேடையோ எனக்கு வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த நான் தவறுவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், அனைவரும் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டதை விட அனைவரும்  வாக்களியுங்கள் என்று வலியுறுத்தியதுதான் அதிகம். 

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை,  தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. 

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்த முகாம்கள் வரும் நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த பிறகும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பவர்கள் இந்த முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது, வாக்களிக்கத் தகுதிவாய்ந்த மாணவர்கள், இளைஞர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க உதவுவது, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

நாம் ஒவ்வொருவரும் முழுமையாகப் பங்கேற்கும்போதுதான் ஜனநாயகம் அர்த்தம் பெறுகிறது. வாக்குரிமையின் வலிமையை உணர்ந்துகொள்வது அனைவரின் உரிமையும் கடமையும் ஆகும்." 

இவ்வாறு அந்த கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Kamal Haasan Letter to MNM Members


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->