மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த வாக்காளர்களுக்கு பாராட்டுகள் - மநீம கமல்ஹாசன்.!
MNM kamalahasan thanks to erode East peoples
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த வெற்றி உண்மையான வெற்றி இல்லை என்றும் பணநாயகம் தான் வென்றது எனவும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் .
இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் ஈவிகேஎஸ் அவர்களுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும்,தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்' என தெரிவித்துள்ளார்.
English Summary
MNM kamalahasan thanks to erode East peoples