மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.!!
MNM members join admk
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலக இணைச் செயலாளர் S.சுரேஷ் பாபு தலைமையில் அக்கட்சியினர் நேரில் சந்தித்து தங்களைக் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.