7499 கோடி ரூபாய் உபரி வருவாய்... டெல்லி மாநில அரசு போல, தமிழக அரசு வருமா? - Seithipunal
Seithipunal


ஓர் அரசும், அமைச்சரவையும் நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை என்று, அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. 

உயர்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நேர்மைக்குச் சான்று.

ஓர் அரசும், அமைச்சரவையும் நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை. டெல்லி மாநில அரசு போல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உபரி வருவாய் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்ச நேர்மையையும், வீண்செலவுகளைத் தவிர்ப்பதையும் பின்பற்றலாமே? மத்திய அரசும்தான்."

இவ்வாறு அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM SAY ABOUT DELHI GOVT VS TN GOVT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->