முட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் - கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் வச்சி செய்த பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவரும் நடிகையும்மான வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் 

Scientific முட்டு:

மீன் ஸீ லெவல்னா என்னன்னு தெரியுமா? (Continues to write an essay on mean sea level).

Though our stomach and mouth are very near and within same body time is required for digestion. #coovam may be near but there is a time called “Reasonable period “ which is required for all mechanisms.

 

கேள்வி கேக்குற டைப் முட்டு:

Floodingக்கு definition தெரியுமா?

இன்னிக்கு எவ்ளோ mm தண்ணி வந்துது தெரியுமா?

Testimony type முட்டு:

மழை நீர் எங்கேயும் தேங்கல. நான் இப்போதான் கிண்டி வழியா வந்தேன், இப்போதான் டீ நகர் வழியா வந்தேன், இப்போதான் வழியா வந்தேன்…

ஆதங்க முட்டு:

இந்த நேரத்துலதான் கேள்வி கேப்பீங்களா?

சலிச்சுக்கற முட்டு:

ஏன் எதிர்கட்சிலேர்ந்து யாருமே களத்துல இல்ல? ஏன் எல்லாத்தையும் நாமளே பார்க்கவேண்டியிருக்கு?

ஏன் volunteers யாரும் களத்துல இல்ல? ஏன் public யாரும் களத்துல இல்ல? ஏன் எல்லாத்தையும் நாமளே பார்க்கவேண்டியிருக்கு?

போட்டி முட்டு:

உங்க அம்மா இருந்தபோது செம்பரம்பாக்கம்…

உங்க அண்ணன் என்ன பெரிய…

நீங்கல்லாம் பேசலாமா…

25 கோடி வாங்கிட்டு…

அடிச்சுவிடுற முட்டு:

Efficient draining of water is impacted by overflow of the system to which it is effectively drained and the ratio of draining is directly proportional to the cos theta sin theta of the underwater current to which it can flow and this is helped by the gradient to follow up with the process of the ayyo ithukku mela enna solli muttukkuduppen to the pumping station and the gradient is the average mean level to which it will outflow through the inflow and then it will join the sea through the canal into the rain.

கவியரங்குக் கவிஞன் முட்டு:

சென்னையை மீட்ட

வெள்ள நிவாரண வள்ளலே

தமிழனை காத்த தலைவா/வி

காட்டமான முட்டு:

கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை

Finger pointing முட்டு:

உங்கள யாரு குளத்துல வீடு கட்ட சொன்னது?

மக்களுக்கு பொறுப்பில்ல. குப்பையகூட சரியா கொட்டமேட்டேங்குறீங்க.

ரைட் அப் முட்டு:

இப்படித்தான் 30000 வருஷத்துக்கு முன்னால, இதே மாதிரி ஒரு பேரிடர் உலகத்த சூழ்ந்தது. அப்போ அங்க இருந்த குரங்குகளும் யானைகளும் கூக்குரலிட்டு ஓடினாங்க. ஏன்னா பூமியுடைய புவி ஈர்ப்பு சக்திக்கும் நிலவுடைய…

வெதர்மேன் முட்டு:

மழை வந்தா தண்ணி நிக்கத்தான் செய்யும். பாம்பு கடிக்கத்தான் செய்யும். நாய் ஊளையிடத்தான் செய்யும். ரிவெர்ஸ் கியர் போட்டா வண்டி பின்னால போகத்தான் செய்யும். பூமி சுத்தத்தான் செய்யும். காற்று அடிக்கத்தான் செய்யும்.

ஆங்கில ஒரு வரி (one-liner) முட்டு:

Terrific work.

Amazing drain of water in all artillery roads.

Superb work by GCC.

Hats off.

Wonderful job,

கணக்கு முட்டு:

இன்னிக்கு 56 mm கன அடி மழை… mmஅ cmஆ convert பண்ணி பார்த்தா…

உபிக்கு 32000 கோடி தமிழ்நாட்டுக்கு வெறும் 7200 கோடி… 32000த்த 3ஆல வகுத்தா..

மழைநீர் 77% வடிஞ்சிருக்கு… 77அ 5ஆல பெருக்கினா…

Climate change முட்டு:

இந்த மழையே அண்டார்டிகால ஐஸ் கேப்ஸ் மெல்ட் ஆகறதுனாலதான்.

இப்படித்தான் 100000 ஆண்டுக்கு முன்னால பூமியோட தட்பவெட்ப நிலை….

Before/after முட்டு:

Photo or video before and after rains.

சாப முட்டு:

குறை சொல்ற நீங்கல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா..

To be continued…. என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

 

#ChennaiFloods #Chennai_Rain #Chennai

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM vinodini vaithiyanadan say about Chennai rains DMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->