திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்.!
banned ciggarets seized in trichy airport
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ளன.
அதே சமயம் விமானம் மூலம் தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.
அப்போது அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி பயணி ஒருவர் தான் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட சிகரெட் வகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை செய்ததில், சிகரெட்டுகள் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து வந்ததும், அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புடையது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் 129 பண்டல் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
banned ciggarets seized in trichy airport