வெளிநாடு செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை - காங்கிரஸ் தாக்கு! - Seithipunal
Seithipunal


இந்தியா - mo இடையேயான  உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரு நாட்டின் நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால், அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனே புறப்பட்டு சென்றுள்ளார்.

புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி புரூனே செல்வதை வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று கூறுகிறார். ஆனால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி எப்போது மனிதாபிமான ரீதியிலான பயணத்தை மேற்கொள்வார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மணிப்பூரில் கலவரமே இல்லை என்று கூறும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மாறாக பதற்றமான நிலைமையே மணிப்பூரில் தொடருகிறது. இதன் மூலம் மணிப்பூர் முதலமைச்சர்  மீதான நம்பகத்தன்மை தொலைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,  அமைதித் தூதுவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உலகம் முழுவதும் செல்லும் பிரதமர், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்காமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. நரேந்திர மோடிக்கு மணிப்பூருக்கு செல்லவும், அங்கு அரசியல் கட்சிகளுடனும், பொது சமூகக் குழுக்களுடன், மக்களுடனும் சந்தித்துப் பேச இன்னும் நேரம் கிடைக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi going abroad has no time to go to Manipur Congress attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->