உ.பி, ஆக்கிரமிப்பில் மசூதி! பலத்த பாதுகாப்புடன் இடித்து தள்ளிய அதிகாரிகள்!
Mosque Encroachment UP
உத்தர பிரதேசத்தில் அக்கரமிப்பில் இருந்த 185 ஆண்டுகள் பழமையான மசூதியின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டில் கட்டப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த சுமார் 20 மீட்டர் பகுதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், பொதுப்பணித்துறையால் மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.
நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்தாலும், அதற்கிடையில் இடிப்பு நடவடிக்கை நடந்தது. மசூதி நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாவட்ட கூடுதல் கலெக்டர், இந்த நடவடிக்கைப் பத்தேற்பட்ட 139 இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகவும், மசூதி நிர்வாகத்துடன் முன்பே விவாதம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.