பாஜக தலைவரின் மனைவியை சீண்டிய எம்.பி!....மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவரின் மனைவி கிரித் மேத்தா, தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய் ராவத் பேசியதாக அவர் குற்றம் சாட்டி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் யந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக ரூ.100 கோடி ஊழலில் ஈடுபட்டதாக பாஜக தலைவரின் மனைவி கிரித் மேத்தா மீது, சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக இந்த அவதூறு வழக்கின் விசாரணை  மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த அவதூறு வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறான வகையில், பாஜக தலைவரின் மனைவியை பற்றி பேசிய விவகாரத்தில்,  சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP who scolded BJP leader wife mumbai High court orders action


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->