பாஜகவின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.! பிரச்சாரத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு.!
mrm election campaign
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக ஆர் எஸ் எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்ஆர்எம்) தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒன்றை அச்சடித்து விநியோகித்து வருகிறது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இந்த துண்டுப்பிரசுரங்களை முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பு இந்த துண்டு பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்து வருகிறது.
அதில், கடந்த 2014ம் ஆண்டு முதல் இஸ்லாமிய சமூக சமுதாயத்திற்காக பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. இஸ்லாமியர்களுக்காக மட்டும் 36 திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.
மேலும் பாஜக ஆட்சியின் கீழ் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சி காலங்களில் இஸ்லாமியர்கள் வறுமை, கல்வியின்மை, முத்தலாக் போன்ற மிக மோசமான நடைமுறை செயல்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் 2014ம் ஆண்டுக்கு பின் பாஜகவின் ஆட்சியில் மதக்கலவரங்கள் மத ரீதியான வன்முறைகள் பெரும்பான்மையாக குறைந்துவிட்டது. தற்போது இஸ்லாமியர்களின் மிகப்பெரிய நலம் விரும்பியாக பாஜக மட்டும்தான் உள்ளது.
ஆகையால் இந்த தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்து, உங்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.