நாளை தமிழகம் முடங்கும் அபாயம்! போராட்டம் உறுதியானதால் அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!
MSME announce strike in tamilnadu on sep 25 for eb bill issue
மின் கட்டணம் உயர்வை குறைப்பது குறித்து அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசு சார்பில் ஏற்கப்படாததால், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் (எம்.எஸ்.எம்.இ) திட்டமிட்டபடி நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர், கடந்த ஓராண்டாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முதல்கட்டமாக காரணம்பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினார்கள். மேலும் உண்ணாவிரத மேடையிலே செப் 25 கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மின்கட்டணம் தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்தியில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே நாளை கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டம் நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்கள் நாளை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 63 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் நாளை மூடப்படுவதால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், உற்பத்தி பாதிக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படும், அதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி உருவாகியுள்ளது.
English Summary
MSME announce strike in tamilnadu on sep 25 for eb bill issue