தமிழகத்தில் 60 இடங்களில் 10 ஆயிரம் அரசு வாடகை குடியிருப்புகள் - அமைச்சர் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (20.04.2022) வீட்டுவசதி & குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையின் கீழ் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் 60 இடங்களில் 10 ஆயிரம் அரசு வாடகை குடியிருப்புகள் உடனடியாக மாற்றி அமைக்கப்படும் என்றும், மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ₨100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்படும். பன்னடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்படும் என்றும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, நில உரிமை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்றும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MuthuSamy TN Assembly TN Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->