தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, நாகலாந்து முதலமைச்சர் கடிதம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, நாகலாந்து முதலமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"நாகாலாந்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதல்வர் நிபியுரியோ, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்" என்று தமிழக அரசு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland Chief Minister letter to Tamil Nadu Chief Minister Mk Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->