திமுகவின் ஆர்.எஸ் பாரதிக்கு நாகலாந்து ஆளுநர் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நாய்க்கறி சாப்பிடும் நாகாலாந்து மக்கள் ரோஷம் வந்து ஆளுநர் ரவியை நாகாலாந்தை விட்டு விரட்டியடித்தனர். அப்படி என்றால் உப்பு போட்டு சாப்பிடும் நாங்கள் என்ன செய்வோம் என யோசித்துப் பாருங்கள் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆர்.எஸ் பாரதியின் இந்த விமர்சனம் நாகாலாந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு ஆர்.எஸ் பாரதி "நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவில்லை" என மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது நாகலாந்து மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அம்மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பாக "தமிழர்கள் ஏராளமானோர் நாகாலாந்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். உணவு பழக்கத்தை வைத்து நாகலாந்து மக்களை அவமரியாதை செய்யக்கூடாது. ஆர்.எஸ் பாரதி கூறிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல. 

தமிழகம் நாகா மக்களுக்கு இடையிலான இணக்கத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாகலாந்து மக்கள் அனைவரும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ் பாரதி கூறியது ஏற்புடையது அல்ல. நாகலாந்து மக்களால் ஆர்.என் ரவி விரட்டியடிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஆர்.என் ரவி மீது நாகாலாந்து மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆர் எஸ் பாரதியின் பேச்சை நாகா மக்கள் கண்டு கொள்ள வேண்டாம்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland Governor la ganesan condemns DMK RS Bharathi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->