நயினாரின் "தலைக்கு மேல் கத்தி".. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!!
Nainar Nagenthiran disqualification case hearing today in Madrashc
தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ராகவன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தாம்பரத்தில் பிடிப்பட்ட நான்கு கோடி ரூபாய் விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறையினர் விசாரணைக்காக ஆஜராகும் வரை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தை மயக்கமாக வைத்து சென்னை உயர் நதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் நைனார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் சுயேச்சை வேட்பாளர் ராகவன் புகார் அளித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று பாஜக வேட்பாளர் மீதான வழக்கு விசாரணைக்கு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Nainar Nagenthiran disqualification case hearing today in Madrashc