நாமக்கல் திமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வெச்சா? உண்மை என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்!
Namakkal DMK MP home fire
நாமக்கல் திமுக எம்.பி. வீட்டில் தீ விபத்து தொடர்பாக, மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
நாமக்கல் மக்களவை உறுப்பினராக இருக்கும் வி.எஸ். மாதேஸ்வரனின் சொந்த கிராமமான சேந்தமங்கலம் அருகேயுள்ள பொட்டணம் பகுதியில் அவரது வீட்டில் திடீர் தீவிபத்து நிகழ்ந்தது.
இந்த வீட்டில் அவரது 75 வயதான தாயார் வருதம்மாள் வசித்து வருகிறார். சம்பவத்தின் போது வீட்டில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இதனை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகின்றார்.
இன்று (ஏப். 10) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும்" என நாமக்கல் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Namakkal DMK MP home fire