திமுகவின் வெற்றி, அதிமுகவின் தோல்வியை நிர்ணயித்த பாஜக! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.

இரவு 9 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 291 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. மற்ற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக பொருத்தவரை 240 இடங்களில் (195 வெற்றி) மட்டுமே முன்னிலை பெற்று வருவதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. பாஜக தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "என்னவோ பாஜக தோற்று விட்டது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றனர் எதிர் கட்சிகள். நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவ‌ர்க‌ளி‌ன் ஆட்சி தொடர்கிறது.

பல தொகுதிகளில் திமுக வின் வெற்றியையும், அ தி மு க வின் தோல்வியையும், பாஜக தான் நி‌ர்ண‌யி‌த்துள்ளது.


 

தமிழகத்தில் பாஜக கால் பதிக்க முடியாது என்று சொன்னவர்கள், பாஜக வேரூன்றி விட்டது என்று திகைத்து நிற்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan Thirupathy say about BJP Election result


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->