மக்களவை சபாநாயகர் பதவியைக் கைப்பற்றியது NDA கூட்டணி..!
NDA Alliance Hold the Lok Sabha Speaker Post
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் தொடங்கிய மக்களவைக் கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் 262 பேரும் நேற்று 271 பேரும் எம். பி. க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு தற்காலிக சபாநாயகரான மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை சபாநாயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் மவெலிக்கரா எம். பி. கே. சுரேஷும் போட்டியிட்டனர்.
இதையடுத்து ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன் மொழிந்தார். அதை பாதுகாப்புத் துறை அமைச்சர் வழி மொழிந்தார். தொடர்ந்து 5 தீர்மானங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவை ஆதரித்து முன் மொழியப் பட்டன.
இதையடுத்து இந்தியா கூட்டணி சார்பில் சுரேஷை ஆதரித்து 3 தீர்மானங்கள் முன் மொழியப் பட்டன. இதையடுத்து 18 ஆவது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
English Summary
NDA Alliance Hold the Lok Sabha Speaker Post