நீட் தேர்வு விவகாரம் : மக்களவை முடக்கம்.. மாநிலங்களவையில் வெளிநடப்பு.. அதிர வைக்கும் இந்தியா கூட்டணி..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் அனுமதி கேட்டு மறுக்கப் பட்டதால் எதிர்க் கட்சிகள் மக்களவையை முடக்கின. மேலும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

நடந்து வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணியினர் மக்களவை, மாநிங்களவை என்று இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்த விவாகரத்திற்கு முன்னரிமை அளித்து வருகின்றனர். இது குறித்த விவாதத்திற்கு எதிர்க் கட்சிகள் அனுமதி கேட்ட போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்துள்ளார். 

இதனால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது. இதுகுறித்து இந்தியர் கூட்டணியைச் சேர்ந்த திமுக எம். பி கனிமொழி பேசுகையில், "நீட் முறைகேடு விவகாரம் தான் இன்று நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ள இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுகுறித்து பேச அனுமதி கேட்ட எதிர்க் கட்சித் தலைவரின் மைக் அணைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து தான் மக்களவையில் அமளி ஏற்பட்டது" என்றார்.

இதையடுத்து மாநிலங்கவையிலும் இந்த விவாகரத்தால் அமளி ஏற்பட்டது. அங்கும் எதிர்க் கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் "பேச அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், நாங்கள் இந்த அவையில் இருப்பதில் பயனில்லை" என்று கூறி இந்தியா கூட்டணியினர் வெளி நடப்பு செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET Exam Issue In Both Houses of Parliament


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->