நீட் முறைகேடு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சிகள் போராட்டம்..!
NEET Scam Opposition MPs Protest Under Rahul Gandhi in Parliament
நீட் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சி எம். பி.க்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மக்களவை கூடியது. மக்களவை கூடியதும் T 20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினார்.
அப்போது அவையில் பேசிய ராகுல் காந்தி, "இந்த நாடாளுமன்றத்திற்கு நீட் தேர்வு விவகாரம் மிக முக்கியம் என்ற ஒரு முக்கிய செய்தியை நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்" என்று பேசினார்.
ஆனால் அடுத்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிறகே, மற்ற விவாதங்கள் நடத்தப் படும்" என்று தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து அவையில் கோஷம் எழுப்பிய எதிர்க் கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளிய சென்று அங்கு எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த அமர்வில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
English Summary
NEET Scam Opposition MPs Protest Under Rahul Gandhi in Parliament