#சற்றுமுன் சட்டப்பேரவையில்., மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரிக்கை.!
NEET TNAssembly Jeganmurthy
இந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கிய உடன் சபாநாயகராகவும் பேசுகையில், "அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
மேலும் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சட்டப்பேரவையில் வாசித்த பின்னர், நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது, "12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒளிவு மறைவின்றி மருத்துவ படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது.
நீட்தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால், பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானது அல்ல, நீட் தேர்வு குறித்த ஆளுநரின் மதிப்பீடுகள் முற்றிலும் தவறானது, ஆளுநரின் கருத்து உயர்மட்ட குழுவை அவமதிப்பது போல் உள்ளது" என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி கோரிக்கை வைத்தார்.
English Summary
NEET TNAssembly Jeganmurthy