மீண்டும் வெடித்த திமுக உள்கட்சி கோஷ்டி மோதல்! அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்ட திமுகவில் உள்கட்சி கோஷ்டி மோதல் பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்த கோஷ்டி மோதலின் உச்சபட்சமாக நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்தது அமைந்துள்ளது.

இந்த நிலையில், பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர், நெல்லை மேயர் பதவி ஏற்பு விழாவிற்கு திமுக மாவட்ட உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. 

இதற்க்கு மறைமுகமாக கண்டனம் மற்றும் தனது அதிகாரத்தை காண்பிக்கும் வகையில், நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், கழக அமைப்பு ரீதியாக உள்ள மாநகர கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகளுக்கு முறையான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் முறைப்படி மாவட்ட பொறுப்பாளர் / மாநகர செயலாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினருக்கோ / பாராளுமன்ற உறுப்பினருக்கோ கழக அமைப்பு ரீதியாக தலையிடுவதற்கு நம் கழகத்தின் சட்ட விதிமுறை இல்லை. ஆகவே தாங்களுக்கு யாராவது அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாக இடையூறு செய்தால் உடனடியாக மாவட்ட பொறுப்பாளரிடமோ / மாநகர செயலாளரிடமோ தகவல் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


.ஆகவே மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாநகர சார்பு அணிகளின் நிர்வாகிகள் மாவட்ட கழகத்திற்கும், மாநகர கழகத்திற்கும் கட்டுப்பட்டு செயல்படும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திமுக எம்எல்ஏ., எம்பி-க்கள் திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு/அழைப்பு விடுக்க முடியாது என்பதை அவர் தெரிவித்துள்ளார். இந்த உள்கட்சி கோஷ்டி மோதலுக்கு திமுக தலைமை முடிவு கட்ட வேண்டும் என்று பெரும்பாலான திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai DMK Inner Politics Clash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->