மத்திய அரசிடம் இருந்து டாக்டர் ராமதாசுக்கு வந்த கடிதம்! விரைவில் ஒழியட்டும் என சூளுரை!
NHAI replies to Dr Ramdoss for his letter
தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தார். அதற்கான பதிலை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
"தமிழ்நாட்டில் முறையாக பராமரிக்கப்படாத தேசிய நெடுஞ்சாலைகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்; முதலீடு எடுக்கப்பட்ட சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று ஆணையிடக்கோரி மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு கடந்த திசம்பர் 7-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
எனது கடிதத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவருக்கு அமைச்சர் நிதின்கட்கரி அனுப்பி வைத்துள்ளார். விரைவில் சுங்கக்கட்டணம் ஒழியட்டும்" என டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தையும் இணைத்துள்ளார்.
English Summary
NHAI replies to Dr Ramdoss for his letter