கருணாநிதியின் பேரன் நாகரிமற்ற வகையில் பேசுவது சரியா? உதயநிதியை வெளுத்து வாங்கிய நிர்மலா.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளை பாதிப்பில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் "வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். டிசம்பர் 18ம் தேதி காலை தகவல் கிடைத்த உடன் அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டோம். மத்திய அரசு கூடுதல் உதவி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4 மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்" என விளக்கம் அளித்தார்.


அப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் அப்பன் வீட்டு பணத்தை தருகிறார்களா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்திற்கு ''கருணாநிதி மிகப்பெரிய தமிழ் பேரறிஞர், அவரது பேரன் இப்படி நாகரிமற்ற வகையில் பேசுவது சரியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தகுதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரும்  6 ஆயிரம் ருபாய் நிவாரணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்கின்றீர்கள்? வங்கி கணக்கில் செலுத்தலாமே.! அரசு பணம் தானே அது? உங்க அப்பன் வீட்டு சொத்தோ, என் அப்பன் சொத்தோ இல்லையே.! உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குதான் பணம் செல்கிறதா ? என உதயநிதியின் விமர்சனத்திற்கு கட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala sitharaman response to udhayanithi criticism


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->