சீலிட்ட கவருடன் வந்த நபர்.!! திறந்து பார்த்தால் பகீர்.. நிதீஷ் குமாரின் நூதன விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் நிதி பத்திர விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக பாஜக தேர்தல் நிதி பத்திரம் மூலம் சுமார் 6000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என பல கட்சிகள் தேர்தல் நிதி பத்திரம் மூலம் நிதி திரட்டி உள்ளது.

அந்த வகையில் தீவாலை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரத்தை நிதியாக பெற்றுள்ளது. 

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பத்திரங்களை சமர்ப்பிக்கும் போது அளித்த விளக்கங்கள் நேற்று முதல் வெளியாகி வரும் சூழலில் நிதிஷ் குமார் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் விநோதமான விளக்கத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி ஐக்கிய ஜனதா தளம் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் சீலிட்டக் கவரை கொடுத்தார். அதனைத் திறந்து பார்த்தபோது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான  10 தேர்தல் நிதி பத்திரங்கள் இருந்தது என விளக்கம் அளித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளர் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitish Kumar explained about rs10crs Electoral Bond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->