மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; மக்களவையில் விவாதத்துக்கு ஏற்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்று விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகாய் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினார்.

அதேபோன்று பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமா நாகேஸ்வர ராவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

இந்த நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும் மீண்டும் நண்பகல் 12மணிக்கு தொடங்கியது. அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதத்திற்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No confidence against central govt in line with debate in Lok Sabha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->