போச்சு போ! சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்..! -EPS ஆலோசனையில் பங்கேற்காத செங்கோட்டையன் - Seithipunal
Seithipunal


கடந்த 4 ஆண்டுகளாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இதில் கடந்த ஜனவரி மாதம் சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கொடுத்துள்ளார்.

இது குறித்து தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இன்றைய ஆலோசனையிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No confidence motion against the Speaker Sengottaiyan who did not participate in the EPS consultation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->