இனி விமானத்தில் செல்ல தடை - மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் மந்திரி ராம்மோகன் நாயுடு தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது  பேசிய அவர், வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருக்கும் பட்சத்தில், விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிறுவனங்கள் பின்பற்றும் கடுமையான நெறிமுறை ஒன்று உள்ளது என்றும், இதுபோன்ற மிரட்டல்கள் வரும்போது பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

மேலும், தொடர் மிரட்டல்களை கட்டுப்படுத்த விமானப்போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யவும், சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் 1982-ல் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மிரட்டல்கள் வர தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டது.

இதில், பாதுகாப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்,  இதனால் இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் இனி விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது குறித்து உள்துறை அமைச்சகத்துடன் சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பு தொடர்ந்து பேசி வருவதாகவும், இந்த மிரட்டல்களின் பின்னணியில் சதி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No more air travel ban minister of air transport in a sensational interview


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->