நேற்று கூமுட்டை! இன்று புது ஐட்டத்துடன் விஜயை கிழித்தெடுத்த சீமானின் பரபரப்பு பேட்டி!
NTK Seeman Condemn to TVK Vijay DMK
விஷமும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?, 'திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்' என்று கூறிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவிக்கையில், 'திராவிடம் என்றால் என்ன? தமிழ் தேசியம் என்றால் என்ன? என்று விஜய் விளக்குவாரா?
வில்லனும், கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியும்? திராவிடமும், தமிழ் தேசியமும் வெவ்வேறு. விஜய் தனது கொள்கையை மாற்ற வேண்டும், இல்லை, அவருக்கு இதையெல்லாம் எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மொழிக் கொள்கை தவறானது. ஒரே மொழிக் கொள்கை வேண்டும் என்பதற்காக அடுத்தவனின் மொழியான ஆங்கிலத்தை ஏன் கொள்கையாக வைக்க வேண்டும்?
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றே என கூறி விஜய் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? திராவிடத்தை வாழவைக்க வேண்டும் என்பதற்காகவா அவர் அரசியலுக்கு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தம்பி என்பது வேறு, அவருடைய கட்சியின் கொள்கை என்பது வேறு' எனும் கருத்தை வெளிப்படுத்திய சீமான், 'விஜய் மட்டுமல்ல, எனது கொள்கைக்கு எதிராக நின்றாள் தாய், தந்தையாக இருந்தாலும் எனது எதிரி தான். கடவுளாக இருந்தாலும், எனது கொள்கையில் வேறுபட்டால் எதிரி தான் என்று தெரிவித்தார்.
English Summary
NTK Seeman Condemn to TVK Vijay DMK