பிபிசி ஊடகத்தை பழிவாங்க முற்படுவதா..? சீமான் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் அப்போதைய குஜராத் முதல்வரும் தற்போதைய பிரதமருமான மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன் காரணமாக இந்தியாவில் சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிபிசி ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவி விட்டு பழிவாங்க முற்படுவதாக..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் "மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி ஊடகத்தின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படுத்தி வெளியிட்டதற்கு எதிர்வினையாக பழிவாங்கும் நோக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை என்பது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும்.

புகழ்பெற்ற ஊடகமான பிபிசி.,யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதைச்சதிகார போக்கோடு அவற்றுக்குத் தடை விதித்த ஒன்றிய அரசு தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவி விட்டு தனது அதிகாரத்தை காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது. 

வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி அதன் மூலம் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூக செயற்பாட்டல்களையும், மண்ணுரிமை போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman condemns Income Tax probe of BBC office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->