திராவிடன் என்றால் திருடன் - சீமான் பரபரப்பு பேட்டி!
NTK Seeman Say Dravidan mean Thirudan
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாவது, "திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமானதாகும். வருங்காலங்களில் பருவமழை என்பது இருக்காது; மழை புயல் மழை என்றே இருக்கும். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்; இல்லையென்றால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும்.
தமிழ்நாட்டிற்கு அதானி வந்தபோது யாரை சந்தித்தார் என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து அவருக்கு வேலை இல்லை, இவரு என்ன பெரிய கட்சி தலைவரா? என்று பேசக்கூடாது.
“சங்கி” என்றால் நண்பன்; “திராவிடன்” என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. தமிழ் மக்களை, தமிழினத்தை மறைத்து, திராவிடன் என்று கூறி வருகிறீர்கள்.
நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், நாட்டில் உள்ள அனைத்து முதலமைச்சர்கள் மீதும் வருமான வரி துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக முதலமைச்சர் மீது மட்டும் ஏன் சோதனை மேற்கொள்ளப்படவில்லை?
நாணய வெளியீட்டு விழாவிற்கு டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை அழைத்து வருகிறீர்கள். அப்படி என்றால், திமுகவைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சங்கீ இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
English Summary
NTK Seeman Say Dravidan mean Thirudan