2026 தேர்தல்: தமிழகத்தில் முதல் கட்சியாக, முதல் வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி!
NTK Seeman TN 2026 Assembly Elections Tenkasi candidate
2026 தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தங்களது தேர்தல் ஆயத்த பணிகளை இப்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இதில், ஆளுங்கட்சியான திமுக, தொடர்ந்து ஆட்சியை பிடிக்க 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதேபோல் அதிமுகவும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பல்வேறு கூட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளை செயல்படுத்தி வருகிறது.
மேலும், பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்கான அடிப்படை அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் முதல் சட்டமன்ற வேட்பாளராக தென்காசி தொகுதியில் டாக்டர் கவுசிக் பாண்டியனை அறிவித்துள்ளார்.
கவுசிக், தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக உள்ளார்.
English Summary
NTK Seeman TN 2026 Assembly Elections Tenkasi candidate